நில அளவை, எல்லைக் கல், குறியீடுகள் பற்றி தெரிந்து கொள்வோம்!

சொத்தினை வாங்குவதோடு மட்டுமின்றி சரியான பத்திரத்தில் குறிப்பிட்டுள்ள அளவுகள் சரியாக உள்ளதா என அளந்து எல்லைக் கல்லை நட்டு, அதனை பாதுகாப்பதே சொத்தினை முழுமையாக அனுபவிக்க இயலும். அதன்படி நில அளவை பற்றி தெரிந்து கொள்வோம்

முதல் இந்திய நில அளவை :
தற்போதைய தர்மபுரி, கிருஷ்ணகிரி மற்றும் வடக்கு ஆற்காடு ஆகியவை பாரா மகால் என்று அழைக்கப்பட்டன. சேலம் மற்றும் பாரா மகாலின் மேற்பார்வையாளரான கார்டினல் அலெக்சாண்டர் ரீடு என்பார் சேலம் மற்றும் தர்மபுரி மாவட்டத்தில் சமூகப்பொருளாதார ஆய்வு மேற்கொள்ள உத்தரவிட்டார். இந்த ஆய்வு 1793 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் டபிள்யு. மாதர் தலைமையின்கீழ் ஆரம்பிக்கப்பட்டு 1796 ஆம் ஆண்டளவில் நிறைவு செய்யப்பட்டது. 04.10.1797 தேதியிட்ட கடிதத்தில், பிரிட்டீஷ் அரசால் கார்டினல் அலெக்சாண்டர் ரீடு பாராட்டப்பட்டார்.

பெரிய இந்திய நெடுவரை வில் (Great Trigonometrical Survey)
பெரிய இந்திய நெடுவரைவில் ஆய்வு 1802 ஆம் ஆண்டு ஏப்ரல் 10 ஆம் நாள் பிரிட்டீஷ் நில அளவையாளர் கார்டினல் வில்லியம் லாம்டனால் தொடங்கப்பட்டது. இது சென்னையில் புனித தோமையார் மலையில் (St.Thomas mount) இருந்து இமயமலை அடிவாரம் வரை நடத்தப்பட்டது. 12 கி.மீ. அடிப்படை கோடு அளவிட 57 நாட்கள் எடுத்துக் கொள்ளப்பட்டது.
36 அங்குல பெரிய ½ டன் எடைகொண்ட தியோடோலைட்டு அளவிடப் பயன்படுத்தப்பட்டது. இந்த 5-பத்தாண்டுகள் திட்டம் சர்வே ஜெனரல் லெப்டினண்ட் ஜார்ஜ் எவரெஸ்டால் 1852 ஆம் ஆண்டில் முடிக்கப்பட்டது. நில அளவையாளர் ராதாநாத் சிக்தார் 1852 ஆம் ஆண்டில் எவரெஸ்ட் சிகரத்தை 29,002 அடி உயரம் என்று அளந்தார். நவீன அளவீடுகள் உயரம் 29,037 அடி குறிக்கிறது. இது இந்தியாவில் திட்டமிடப்பட்ட நிலப்பரப்பு வரைபடத்தின் தொடக்கமாகவும், உலகின் பழமையான கணக்கெடுப்பு மற்றும் வரைபட முகமையாகவும் கருதப்படுகிறது.

சிறப்பான முறையில் பணிபுரிந்தவர்களை கௌரவிப்பது அப்போதைய பிரிட்டிஷ் அரசின் நடைமுறை. அந்த வகையில் எவரெஸ்ட் அவர்களின் பெயரை இமய மலையின் குன்றுக்கு எவரெஸ்ட் என பெயரிட்டனர், அதே போல் லாம்டன் சேவையை பாராட்டி கௌசிகா நதி உற்பத்தி ஆகும் குருடி மலையில் உள்ள ஒரு குன்றுக்குலாம்டன் ஹில்என்று பெயரிட்டனர்.

நில அளவை கற்கள் (Survey Stones)

“A” கிளாஸ் கற்கள் ( “A” Class Stones)
முதலில் நில அளவையில் “A”கற்கள் மூன்று கிராமங்கள் சந்திக்கும் இடங்களிலும் அதற்கு அடுத்து இரண்டு பக்கங்களிலும் “A”கற்கள் நடப்படுகின்றன.
“A” கிளாஸ் கற்கள் அளவு: 90cm × 25cm × 25cm

“B” கிளாஸ் கற்கள் ( “B” Class Stones)
ஒவ்வொரு முச்சந்தியிலும், “G” லயன் எனப்படும் Giometrival Line ஆரம்பிக்குமிடத்திலும் நடப்படும்.
“B” கிளாஸ் கற்கள் அளவு: 60cm × 15cm × 15cm

நில அளவை கற்கள் நடப்படும் இடங்கள்

1. Open Block–களில் நில அளவை கற்கள் “A” கிளாஸ் கற்கள் (90cm × 25cm × 25cm) டவுன் நில அளவை எல்லையிலும், கோணமானி கொண்டு அளக்கக் கூடிய இடங்களில் கற்கள் நடப்பட வேண்டும்.
Medium-பிளாக்குகளில் கோணமானி கொண்டு அளக்கக்கூடிய இடங்களில் அதாவது 3 அல்லது 4 தெரு சந்திக்கும் இடங்களில் பூமிக்கு அடியில் “A” கிளாஸ் கற்கள் அளவு: 90cm × 25cm × 25cm நடப்பட வேண்டும். தலையில் அம்புக்குறியும் குழியும் இருக்க வேண்டும்.
“B” கிளாஸ் கற்கள் அளவு: 60cm × 15cm × 15cm நில அளவை புலங்கள் காலியிடமாக இருந்தால் நடப்பட வேண்டும் அல்லது சுவராக இருந்தால் தார் மார்க் போட வேண்டும். டவுன் நில அளவை எல்லையில் “B” கிளாஸ் கற்கள் நடப்பட வேண்டும்.
சங்கிலி நில அளவை கல் (Chain Survey Stone) 30cm × 15cm × 15cm, இந்த கற்கள், இரண்டு கோணமானி கொண்டு நடப்படும் கற்களில் லயனில் இடையில் நடப்பட வேண்டும். கோணமானி நில அளவை செய்ய வேண்டியதில்லை. தலையில் “+” மார்க் அடிக்க வேண்டும்.

நில அளவை மற்றும் எல்லைகள் நிர்ணயச் சட்டம், 1923 இன் படி,
ஒவ்வொரு நிலச்சுவான்களும் அவசியம், நில அளவை கற்களை பராமரிக்கப்பட வேண்டும். அவர்களே நில அலவை கற்களை சொந்த செலவில் புதுப்பித்துக் கொண்டும், ரிப்பேர் செய்து கொண்டும், வரலாம். அப்படி அவர்கள் நில அளவை கற்களை எதுவும் செய்யாது இருந்தால், அரசே கற்களை புதுப்பித்து நில அளவை கற்களின் கிரயம், நடப்பட்ட கல்லின் கூலித் தொகையையும் சேர்த்து செலவு தொகைகளை விகிதாசாரப்படி பிடித்தம் செய்யப்படும். [பிரிவு 15(1)]
நில அளவை கற்களை யாராவது, சேதப்படுத்தினாலும், காணாமற்போனாலும், அப்புறப்படுத்தி இருந்தாலும் சம்மந்தப்பட்ட நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வட்டாச்சியருக்கு அறிக்கை கொடுப்பதற்கு கிராம நிர்வாக அதிகாரிக்கு அதிகாரம் அளிக்கப்படுகிறது. [பிரிவு 16(c)]

நில அளவை கற்கள் சேமிப்புக் கிடங்கு (Survey Stone Depot Register)
காணாமல் போன நில அளவை கற்களை வேறு கற்கள் நடுவதற்காக நில அளவை கல் காண்ட்ராக்டரிடம் வாங்கக் கூடிய கற்கள், நில அளவை கற்கள் சேமிப்புக் கிடங்கு கணக்குப் பதிவேட்டில் இருக்கும்.

நில அளவை சம்மந்தமாக கிராம நிர்வாக அலுவலரின் பணிகள்
1. அரசால் கொடுக்கப்பட்ட நில அளவுப் புத்தகம், கிராமபதிவேடு, சிட்ட, மற்றும் புதிதாக தயாரிக்கும் அடங்க்ஜல், புதிய சிட்ட, நில அளவை கற்கள் சேமிப்புக் கிடங்கு பதிவேடு, நில அளவை கற்கள் படம், கற்கள், நில அளவை கருவிகள் ஆகியவற்றை பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும்.
2. நில அளவை கற்கள், பராமரிக்க வேண்டிய கற்களை 1000 கற்கள் வரும்படி பிரித்து தணிக்கை மாதாமாதம் முன்னேற்ற அறிக்கை தயாரித்து, வருவாய் ஆய்வாளர் மூலமாக நில அளவருக்கு அனுப்ப வேண்டும்
3. நில அளவை கற்கல் கிடங்கில் உள்ள இருப்பு கற்களை பாதுகாப்பாக வைத்து இருக்க வேண்டும்.
4. கல் தணிக்கையின் போது கற்கள் காணாமற் போனால் அதனை புதுப்பிக்க 15 (2) அறிவிப்பை சம்மந்தப்பட்ட உரிமையாளருக்கு கொடுக்கப்பட வேண்டும். அறிக்கையில் பிக்கா வட்ட நில அளவையர் கையெழுத்து வாங்கி இருக்க வேண்டும்.
5. கிராமத்தில் பராமரிக்க வேண்டிய நில அளவை கற்களை யாராவது அப்புறப்படுத்தியிருந்தால், வட்டாட்சியருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும்.
6. வாய்க்கால், சாலை, இதர விவரங்கள் அழிக்கப்பட்டால் உடனே அறிக்கை கொடுக்க வேண்டும்.
7. கல் டிப்போவிலிருந்து நில அளவை கற்கள் விலைக்கு கொடுக்கப்பட வேண்டும். ஆனால் மனைப்பிரிவுக்கு கற்கள் கிரயம் செய்யக் கூடாது.

நில அளவை கணக்கீடுகள்
           ஏக்கர்
1 ஏக்கர் – 100 சென்ட்
1 ஏக்கர் – 0.404694 ஹெக்டேர்
1 ஏக்கர் – 40.5 ஏர்ஸ்
1 ஏக்கர் – 43560 .அடி
1 ஏக்கர் – 4046 மீ
           செண்ட்
1 செண்ட் – 001 ஏக்கர்
1 செண்ட் – 0040 ஹெக்டேர்
1 செண்ட் – 0.405 ஏர்ஸ்
1 செண்ட் – 435.54 .அடி
1 செண்ட் – 40.46 மீ
          ஹெக்டேர்
1 ஹெக்டேர் – 2.47 ஏக்கர்
1 ஹெக்டேர் – 247 செண்ட்
1 ஹெக்டேர் – 100 ஏர்ஸ்
1 ஹெக்டேர் – 107637.8 .அடி
1 ஹெக்டேர் – 10,000 மீ
            ஏர்ஸ்
1 ஏர் – 2.47 செண்ட்
1 ஏர் – 100 .மீ
1 ஏர் – 1076 .அடி
100 குழி = ஒரு மா
20 மா = ஒரு வேலி
3.5 மா = ஒரு ஏக்கர்
6.17 ஏக்கர் = ஒரு வேலி
1 ஏக்கரின் நீளம் = 1 பர்லாங், 40 கம்பங்கள், அல்லது 220 கெஜம்
1 ஏக்கரின் அகலம் = 1 சங்கிலி, 4 கம்பங்கள், அல்லது 22 கெஜம்
          நீட்டலளவை
• 10 கோண் = 1 நுண்ணணு
• 10 நுண்ணணு = 1 அணு
• 8 அணு = 1 கதிர்த்துகள்
• 8 கதிர்த்துகள் = 1 துசும்பு
• 8 துசும்பு = 1 மயிர்நுனி
• 8 மயிர்நுனி = 1 நுண்மணல்
• 8 நுண்மணல் = 1 சிறு கடுகு
• 8 சிறு கடுகு = 1 எள்
• 8 எள் = 1 நெல்
• 8 நெல் = 1 விரல்
•12 விரல் = 1 சாண்
•2 சாண் = 1 முழம்
•4 முழம் = 1 பாகம்
•6000 பாகம் = 1 காதம் (1200 கஜம்)
•4 காதம் = 1 யோசனை
         வழியளவை
• 8 தோரை(நெல்) = 1 விரல்
• 12 விரல் = 1 சாண்
• 2 சாண் = 1 முழம்
• 4 முழம் = 1 பாகம் அல்லது தண்டம்
• 2000 தண்டம் = 1 குரோசம் 21/4மைல்
• 4 குரோசம் = 1 யோசனை
• 71/2 நாழிகைவழி = 1 காதம்(10மைல்)

நிலவளவை குழிக்கணக்கு வருமாறு
16 சாண் = 1 கோல்
18 கோல் = 1 குழி
100 குழி = 1 மா
240 குழி = 1 பாடகம்

கன்வெர்ஷன்
1 சதுர அங்குலம் = 6.4516 சதுர செண்டிமீட்டர்
1 சதுர அடி = 0.09290304 சதுர மீட்டர்
1 சதுர கெஜம் = 0.83612736 சதுர மீட்டர்
1 சதுர மைல் = 2.589988110336 சதுர கிலோமீட்டர்
பிற அலகுகள்
1 ஏர் = 100 சதுர மீட்டர்
1 ஹெக்டேர் = 100 ஏர் = 10,000 சதுர மீட்டர் = 0.01 சதுர கிலோமீட்டர்
தற்பொழுது ஏர் அதிகமாகப் பயன்பாட்டில் இல்லை என்றாலும் ஹெக்டேர் இன்றும் நிலங்களை அளக்கும்போது பயன்படுத்தப்படுகிறது.

நிலங்களை அளக்கும்போது பொதுவாகப் பயன்படுத்தப்படும் அலகு ஏக்கர் ஆகும்.
1 ஏக்கர் = 4,840 சதுர கெஜம் = 43,560 சதுர அடி = 4046.8564224 சதுர மீட்டர்
1 சதுர மைல் = 640 ஏக்கர் = 2.5899881103 சதுர கிலோ மீட்டர்
1 கிரவுண்ட் = 2400 சதுர அடி

B. நீள அளவைகள்
1 கிலோமீட்டர் = 0.621 மைல்
1 மைல் = 1.609 கிலோமீட்டர்
1 கிலோமீட்டர் = 1000 மீட்டர்
1 மீட்டர் = 39.37 அடி
 
Top