AK-47 துப்பாக்கியை முழுசாக விழுங்கிய பாம்பு..! வைரல் புகைப்படம்..!?

சமூக வளைத்தளங்களில் நாள் தோறும் பதிவேற்றம் செய்யப்படுகிற புகைப்படங்கள், வீடியோக்கள் சில நேரங்களில் சுவாரஸ்யமானதாகவும், சில பதிவுகள் மனதை உலுக்குவதாகவும் இருக்கும். குறிப்பாக வளர்ப்பு பிராணிகள் செய்யும் குறும்புகள் ஏகத்துக்கும் ஹிட்டடிக்கும் ! தற்போது,வெளியாகியுள்ள ஒரு புகைப்படத்தில் பாம்பு ஒன்று AK- 47ஐ துப்பாக்கியை விழுங்கி இருப்பதுபோல காணப்படுகிறது.

இந்த புகைப்படம் எங்கிருந்து எடுக்கப்பட்டதென்று தெரியவில்லை, இது ஐந்து மாதங்களுக்கு முன்பு எடுக்கப்பட்ட பழைய புகைப்படம். இப்போது மீண்டும் ஆன்லைனில் வெளியாகி வைரலாகிவருகிறது. இதனைப் பார்த்த நெட்டிசன்கள் இது உண்மைதானா என்று ஆச்சர்யமாக கேள்வி எழுப்பியிருக்கிறார்கள்!


@paeh_judin என்ற ட்விட்டர் ஐடியில் வெளியான இந்த போட்டோ இதுவரை 13k ரீ ட்வீட்களையும், 11k லைக்குகளை அள்ளியிருக்கிறது! ‘இந்த பாம்பு எப்படி ரட்டடடட என்று கத்துமோ?!’ ‘இது தற்கொலை செய்துகொண்டுள்ளது’ ‘வெப்பன் upgrade” என்று’ காமெடியாக கமெண்ட் செய்திருக்கிறார்கள். தவிர, இது உண்மையான பதிவா என்று உறுதி செய்யபடவில்லை!


யாரோ ஒரு வெளியூர் மீம்ஸ் பார்ட்டி காமெடிக்காக வெட்டி ஒட்டிய படமாக இருப்பதற்கே வாய்ப்புகள் உள்ளதென்று பலரும் கருத்து சொல்லியிருக்கிறார்கள். ஆனாலும் அநியாயத்துக்கு இந்தப் புகைப்படம் வைரலாகி வருகிறது!

 
Top