இன்னுமா உங்களுக்கு ஏர்டெல் வைஃபை காலிங் வசதி கிடைக்கல? சரி தெரிந்துகொள்ளலாம்.! வாங்க பார்ப்போம்.


சென்னை: உங்கள் மொபைலில் AIRTEL WiFi காலிங் வசதி கிடைக்கவில்லையா? அதை எப்படி ஆக்டிவேட் செய்வது என்று இங்கே பார்க்கலாம்.

இணைய சேவைகள்
2ஜி, 3ஜி, 4ஜி என அடுத்தடுத்த தலைமுறைகளுக்கான அதிவேக இணைய சேவைகள் வந்துகொண்டு தான் இருக்கின்றன, ஆனால் இதன் மூலம் என்ன பலன்? இன்றும் சாதாரண குலர்வழி அழைப்பு கூட தெளிவாக தடையின்றி மேற்கொள்ளமுடியவில்லை என பல்வேறு மக்கள் கருத்து தெரிவித்த வண்ணம் உள்ளனர்.


குறிப்பாக இந்த மோசமான அலைவரிசை பிரச்சனையால் குமுறுபவர்கள் ஏராளம் என்றுதான் கூறவேண்டும். இந்த நிலையில் கடந்த சில வாரங்களாக ஏர்டெல், ஜியோ உள்ளிட்ட இந்தியாவின் முன்னணி தொலைத் தொடர்புசேவை நிறுவனங்கள் குரல்வழி அழைப்பின் அடுத்த கட்டம் என்று கூறி அறிமுகம் செய்துள்ள வைஃபை காலிங் என்றால் என்ன? அது எப்படி செயல்படும், அதனால் கிடைக்கும் நன்மைகள் என்ன போன்ற கேள்விகளுக்கு இந்த கட்டுரை சமர்ப்பணம்.

எந்தவொரு செயலியும் தேவையில்லை:

அதாவது நகரங்களில் அதிகமாக அலைவரிசை கோபுரங்கள் இருந்தாலும், குரல்வழி அழைப்புகளை மேற்கொள்வதிலும், தங்குதடையின்றி உரையாடுவதிலும் அடிக்கடி பிரச்சனைகள் ஏற்படுகின்றன என்றுதான் கூறவேண்டும். இந்த பிரச்சனை கிராமப்புற பகுதிகளிலும் வேறொரு வடிவில் இருக்கதான் செய்கிறது. எனவே இந்த பிரச்சனையை போக்குவதற்கு இந்தியாவிலுள்ள சில தொலைத் தொடர்பு நிறுவனங்கள் மேற்கொண்டுள்ள புதிய முயற்சிதான் இந்த வைஃபை காலிங். குறிப்பாக வைஃபை காலிங்-பெயர் குறிப்பிடுவதை போன்றே இந்த முறையில் உங்களது வைஃபை இணைப்பைப் பயன்படுத்தி திறன்பேசிகளுக்கு இடையிலான குரல்வழி அழைப்புகள் மேற்கொள்ளப்படுகின்றன. சிலருக்கு ஒரு கேள்வி வரும், அது வாட்ஸ்ஆப் உள்ளிட்ட செயலிகளின் வாயிலாக இணையத்தைப் பயன்படுத்தி வருகிறோம் என்கிறீர்களா? ஆனால் இந்த வைஃபை காலிங்கை மேற்கொள்வதற்கு தனியே எந்தவொரு செயலியும் தேவையில்லை என்பதுதான் முக்கிய சிறப்பு. இதற்கு முன்பாக 4ஜி தொழில்நுட்பத்தை பயன்படுத்தும் இரு திறன்பேசி பயன்பாட்டாளர் இடையே மேற்கொள்ளப்படும்.

குரல்வழி அழைப்புகளின் தரத்தை அதிகரிக்க ஏழடுவுநு எனும் தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டது. அதன் நீட்சியே இந்த வைஃபை காலிங் (VoWiFi).

ப்ரீபெய்டு மற்றும் போஸ்ட்பெய்டு
இந்தியா முழுவதும் தங்களது ப்ரீபெய்டு மற்றும் போஸ்ட்பெய்டு வாடிக்கையாளர்கள் வைஃபை காலிங் வசதியை இலவசமாக பயன்படுத்த முடியும் என்றும், ஏர்டெல், ஜியோ உள்ளிட்ட நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. இருந்தபோதிலம் இந்த வைஃபை காலிங்கை பயன்படுத்துவதற்கு முன்னர் சில விஷயங்களை தெரிந்து கொள்ளவேண்டும்.

சில விஷயங்களை தெரிந்து கொள்ளவேண்டும்

குறிப்பாக அனைத்து ஸ்மார்ட்போன்களிலும் இந்த வைஃபை காலிங் அம்சத்தை மேற்கொள்ள முடியாது, எனவே ஸ்மார்ட்போனில் இந்த வசதியை பயன்படுத்த முடியுமா என்பதை உங்களது தொலைத்தொடர்பு நிறுவனத்தின் இணையதளம் மூலம் தெரிந்துகொள்ள வேண்டும். உங்களது திறன்பேசியில் வைஃபை காலிங்கை மேற்கொள்ள முடியும் என்றால், அதற்குதகுந்தபடி செட்டிங்சை மாற்றியமைக்கவேண்டும், பின்பு உங்கள் ஸ்மார்ட்போனில் வோல்ட்இ மற்றும் VoWiFi தொழில் நுட்பங்களை கொண்டு அழைப்பை மேற்கொள்ளுவதற்கு செட்டிங்ஸ் பகுதிக்கு சென்று ஒப்புதல் தெரிவியுங்கள். ஒருவேளை வைஃபை பயன்படுத்த கூடிய பட்டியில்ல உங்கள் ஸ்மார்ட்போன் மாடல் இருந்தும், மேற்காணும் செட்டிங்சை

மேற்கொள்ள முடியவில்லை என்றால், உங்களது ஸ்மார்ட்போன் இயங்குதளத்தை புதுபிக்கவும்.மேலும் நிலையான வைஃபை இணைப்பை பயன்படுத்தி இதே முறையை கையாளும் மற்றொரு நபருக்கு நீங்கள் தெளிவான தங்குதடையின்றி குரல்வழி அழைப்பை மேற்கொள்ள முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.


ஏர்டெல் வைஃபை அழைப்பு

சமீபத்திய அம்சம் ஏர்டெல் சந்தாதாரர்களுக்கு வழக்கமான நெட்வொர்க்கிற்கு பதிலாக வைஃபை இணைய இணைப்பைப் பயன்படுத்தி அழைப்புகளை மேற்கொள்ள அனுமதிக்கிறது. மொபைல் நெட்வொர்க் மோசமாக இருக்கும் நேரத்தில் பயனர்கள் தங்களை வைஃபை உடன் இணைத்து அழைப்புகளை மேற்கொள்ளலாம். இந்த சேவையைத் துவக்கத்தில் மட்டும் 3 மில்லியனுக்கும் அதிகமான பயனர்கள் பயன்படுத்தி வருகின்றனர். மேலும் இந்த ஆண்டு இறுதிக்குள் 10 மில்லியன் பயனர்களை எட்டும் என்று நிறுவனம் எதிர்பார்க்கிறது.

ஏர்டெல் வைஃபை அழைப்பின் மற்றொரு நன்மை

ஏர்டெல் வைஃபை அழைப்பு என்பது மக்கள் தொகை கொண்ட பகுதிகளில் வழக்கமான செல்லுலார் நெட்வொர்க்குகளை நீக்குவதற்கான சிறந்த கருவியாகச் செயல்படுகிறது. ஏர்டெல் இந்த புதிய சேவையை இலவசமாக வழங்கி வருகிறது, மேலும் பயனர்கள் தங்கள் தற்போதைய மொபைல் ரீசார்ஜ் திட்டங்களுடன் இந்த சேவையைப் பயன்படுத்தலாம்.

ஏர்டெல் சிம் இருந்தால் மட்டும் போதும்

ஏர்டெல் வைஃபை அழைப்பின் மற்றொரு நன்மை எச்டி அல்லது வோல்டிஇ குரல் வசதிகள் இல்லாத தொலைதூர பகுதிகளிலிருந்தும் எச்டி அழைப்புகளைச் செய்வதற்கான வசதியை ஏர்டெல் உங்களுக்கு வழங்குகிறது. உங்களிடம் ஒரு ஏர்டெல் சிம் இருந்தால் மட்டும் போதும்.
உங்கள் ஸ்மார்ட்போன் இந்த பட்டியலில் உள்ளதா?

ஏர்டெல் வைஃபை காலிங், ஆப்பிள் ஐபோன்கள் முதல் சாம்சங்கின் பல்வேறு சீரிஸ் வரை பல வகையான ஸ்மார்ட்போன்களை ஏர்டெல் வைஃபை காலிங் ஆதரிக்கிறது. பிளாக்ஷிப் ஸ்மார்ட்போன்கள் தவிர, மலிவு விலை ஸ்மார்ட்போன்களிலும் இந்த சேவையை உங்களால் அனுபவிக்க முடியும். உங்கள் ஸ்மார்ட்போன் இதில் உள்ளதா செக் செய்யுங்கள் நீங்கள் ஒன்பிளஸ் ஸ்மார்ட்போன் வைத்திருந்தால் மட்டும் ஏர்டெல்லின் நெட்வொர்க்கில் மட்டுமே வைஃபை அழைப்பை இயக்க முடியும். இணக்கமான ஸ்மார்ட்போன் பட்டியலைக் காண இந்த லிங்க் பயன்படுத்துங்கள்



ஏர்டெல் வைஃபை காலிங் எப்படிப் பயன்படுத்துவது?

ஏர்டெல் ஜம்மு காஷ்மீர் தவிர, தேசிய அளவில் அனைத்து இடங்களிலும் இந்த புதிய சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது. ஏர்டெல் வைஃபை அழைப்பு அனைத்து பிராட்பேண்ட் வழங்குநர்களிடமும் கிடைக்கிறது, அதாவது நீங்கள் ஏர்டெல் பயனராக இருக்கும் வரை, எந்த வைஃபை இணைப்பிலும் சேவையை அனுபவிக்க முடியும்.

உடனே ட்ரை செய்யுங்கள்

இந்த சேவையை பயன்படுத்த முதலில் வோல்ட்-இ ஆக்டிவேட் செய்யுங்கள்,

Settings >Networks >Airtel SIM >VoLTE. பிறகு Settings > Network Settings > Airtel SIM > Activate Make Calls Using Wi-Fi கிளிக் செய்யுங்கள். உடனே இந்த அம்சத்தை ட்ரை செய்யுங்கள்.
 
Top