தேனி: சென்னையை தொடர்ந்து தமிழகத்தில் இரண்டாவதாக தேனி அரசு மருத்துவக் கல்லூரியில் கொரோனா ஆய்வகம் அமைக்க மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.
தமிழகத்தில் காஞ்சிபுரத்தைச் சேர்ந்த பொறியாளர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. அவருக்கு சென்னை அரசு ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையின் தனிமைப்படுத்தப்பட்ட வார்டில் சிகிச்சை அளித்து வருகிறார்கள்.
அண்டை மாநிலமான கேரளாவில கொரோனா வைரஸ் தொற்றால் ஐந்து பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். பத்தினம் திட்டா மாவட்டத்தைச் சேர்ந்த இவரகள் அனைவரும் இத்தாலியில் இருந்து திரும்பியவர்கள் ஆவர். ஒட்டுமொத்தமாக இந்தியா முழுவதும் 39 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர்.



தமிழகத்தில் சென்னை கிண்டியில் கொரோனா ஆய்வகம் அமைக்கப்பட்ட நிலையில். தேனி அரசு மருத்துவக் கல்லூரியில் கொரோனா ஆய்வகம் அமைக்க மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.


Follow :
Subscribe - https://www.youtube.com/channel/

Facebook - https://www.facebook.com

Twitter - https://twitter.com/tipsforindia

Google+ - https://plus.google.com/u/0/+


 
Top