முட்டை விரும்பிகளுக்கு இந்த செய்தி அதிர்ச்சியாக கூட இருக்கலாம். முட்டையை வேகவைத்தோ பொறித்தோ சாப்பிடுபவர்களை விட ஹாஃப் பாயிலாகவோ, ஆம்லேட்டாகவோ சாப்பிடதான் பலருக்கு கொள்ளை பிரியம். அந்த வகையில் தற்போதைய இளைஞரின் ட்ரெண்ட் கலக்கி...
என்னதான் தோசை, இட்லி சாப்பிட்டாலும் இறுதியாக ஒரு கலக்கி சாப்பிட்டால் தான் உணவு முழுமை பெறுகிறது என்ற அளவுக்கு ஒரு திருப்தி... ஆனால் கலக்கி பல வகைகளில் உடலுக்கு கேடு விளைவிக்கும் என மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர்.
ஒரு நாளைக்கு 4 முட்டை வரை ஒரு நபர் எடுத்துக்கொள்ளலாம். ஆனால் முட்டையை வேகவைக்காமல் பச்சையாக சாப்பிட்டால் அது ஆபத்து என்கின்றனர் மருத்துவர்கள். மேலும் 4 முட்டைக்கு மேல் சாப்பிட்டால் செரிமான பிரச்னை ஏற்படும் என கூறும் மருத்துவர்கள், வெள்ளை கருவில் 3 கிராம் புரதமும், மஞ்சள் கருவில் 3 கிராம் புரதமும் இருப்பதாக தெரிவிக்கின்றனர். அத்துடன் மஞ்சள் கருவில் புரதத்தைவிட பல சத்துக்கள் நிறைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
பச்சையாக முட்டையை சாப்பிடுவதால், அதிலுள்ள பாக்ட்டீரியா மற்றும் வைரஸ்கள் உடலுக்கு பாதிப்பை ஏற்படுத்தலாம், அதனால் முட்டையை அரை வேகவைத்தோ, அல்லது பச்சையாகவோ எடுத்துக்கொள்ள வேண்டாம் என்கின்றனர் மருத்துவர்கள். மேலும் முட்டை கலக்கி அரை வேக்காடோடு இருப்பதால் அதில் அதிக அளவு கொழுப்பு இருக்கும் என்றும், இது உடல் எடையைக்கூட்டும் என்றும் மருத்துவர்கள் கூறுகின்றனர்.
இவை அனைத்து கெட்ட கொழுப்பாகும், இவை கல்லீரலில் தேங்கி சர்க்கரை நோய், புற்று நோய் போன்றவை வர காரணமாக அமையும் என்றும் மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.