வேலைப்பளு காரணமாக அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்த தகனம் செய்யும் பணியாளர் ஒருவரை சக ஊழியர் ஒருவர் தெரியாமல் தகனம் செய்து விட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.



அமெரிக்காவில் உள்ள நியூயார்க்கில் தினமும் நூற்றுக்கணக்கான பிணங்கள் இறுதிச் சடங்கு செய்யும் இடத்திற்கு வருவதால் தகனம் செய்யும் பணியாளர்கள் பல மணி நேரம் தொடர்ச்சியாக வேலை பார்த்து வருகிறார்.



இந்த நிலையில் மைக்கேல் என்ற தகனம் சடங்கு செய்யும் பணியாளர் வேலைப்பளு காரணமாக அங்கிருந்து ஸ்ட்ரெச்சரில் படுத்து தூங்கி விட்டார். இதனை அடுத்து சக ஊழியர் அந்த ஸ்ட்ரெச்சரில் இருப்பது பிணம் என நினைத்து மின்மயானத்தில் அவரை தகனம் செய்து விட்டார்.



ஆயிரத்து 400 டிகிரி வெப்பத்தில் வெப்பம் பட்டவுடன் அலறிய மைக்கேல் சில வினாடிகளில் சாம்பலாக்கி விட்டார். இதனை பார்த்த சக ஊழியர் அதிர்ச்சி அடைந்தார் இதுகுறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
 
Top