ஊரடங்கு நேரத்தில் உள்ளே புகுந்து தனிமை! லோடுமேன் வீட்டில் லோக்கல் போலீஸ் செய்த காரியம்! கதவை தட்டியபோது தகராறு.!
திருச்சி மாவட்டம் சங்கிலியாண்டபுரம் அருகே உள்ள ராமமூர்த்தி நகரைச் சேர்ந்த லோடுமேன் ஒருவர் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்தார். அதில்; எனக்கு திருமணமாகி 3 குழந்தைகள் உள்ளனர். நான் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு துபாயில் வேலைபார்த்து வந்தேன். அப்போது என் மனைவிக்கும் இன்னொருவருக்கும் தொடர்பு இருப்பதாக ரகசிய தகவல் எனக்கு வந்தது.

இதனால் துபாயில் இருந்து திருச்சி வந்த பிறகு மனைவியிடம் இதுகுறித்து கேட்டபோது, எனக்கும் மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டது. இதையடுத்து காவல்துறையில் புகார் அளித்தேன், அவர்கள் எங்களை சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர். இந்த சம்பவங்களுக்கு பிறகு என் மனைவியை பிரிந்து தனியாக லோடுமேனாக வேலை செய்து வருகிறேன். இந்நிலையில் நேற்றிரவு வழக்கம்போல வேலைக்கு செல்வதற்காக என் மனைவியின் வீட்டு வழியாக சென்றபோது யாரோ ஒருவர் வீட்டில் நுழைவதை பார்த்து கதவை தட்டினேன். அப்போது கதவை திறந்து என்மனைவியும், காவல்துறை பணியில் இருக்கும் நபரும் சேர்ந்து என்னை தாக்கினர். அவர்மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியிருந்தார்.

இந்த புகார் குறித்து போலீசார் கூறுகையில்; புகார் அளித்தவரின் மனைவிக்கும், மாநகர காவல்துறையில் எஸ்எஸ்ஐ பதவியில் இருப்பவருக்கும் 7 ஆண்டாக தொடர்பு இருப்பது தெரியவந்துள்ளது. மனைவியின் வீட்டை நள்ளிரவில் கதவை தட்டியதால் ஏற்பட்ட தகராறு குறித்து விசாரித்து வருவதாகவும் போலீஸ் தரப்பில் கூறப்பட்டது.
 
Top