ஏர்டெல் நிறுவனம் தொடர்ந்து சிறப்பான சலுகைகள் மற்றும் திட்டங்களை அறிவித்துகொண்டே தான் இருக்கிறது. குறிப்பாக இந்நிறுவனம் தனது வாடிக்கையாளர்களை கவனித்துக்கொள்வதை விரும்புகிறது,அதனால்தான் ஏர்டெல் தேங்க்ஸ் திட்டத்தை உருவாக்கியது.ஏர்டெல் தேங்க்ஸ் திட்டத்தில் இருக்கும் வாடிக்கையாளர்களுக்கு இந்த டெலிகாம் நிறுவனம் பிரத்யேக சலுகைகளை வழங்குகிறது.

அதன்படி ஏர்டெல் நிறுவனத்தின் வாடிக்கையாளராக இருந்தால், இந்த AirtelThanks ஆப் வசதியை பதிவிறக்கம் செய்து உங்களுக்கு கிடைக்கும் அனைத்து நன்மைகளையும் சரிபார்க்கலாம்.


இந்த ஏர்டெல் தேங்க்ஸ் திட்டத்தின் ஒரு பகுதியாக ஏர்டெல் நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கும் அனைத்துZEE5 பிரீமியம் உள்ளடக்கங்களுக்குமான இலவச வரம்பற்ற அணுகலை வழங்க ZEE5 உடன் கூட்டு சேர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


ஆனால் இந்த இலவச சலுகை ஏர்டெல் தேங்கஸ் திட்டத்தின்கீழ் பதிவுபெற்ற வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே கிடைக்கும்


என தெரிவிக்கப்பட்டுள்ளது. பின்பு இந்த சலுகை 2020 மே4 முதல் ஜூலை 12 வரை மட்டுமே செல்லுபடியாகும். சுருக்கமாக இந்த காலகட்டத்திற்கு இடையில், நீங்கள் விரும்பும் அளவுக்கு ZEE5 உள்ளடக்கத்தை ஸ்ட்ரீம் செய்யலாம்.


ஏர்டெல் தேங்க்ஸ் நன்மைகளின் ஒரு பகுதியாக ZEE5 இன் பிரீமியம் கன்டென்ட் லைப்ரரிக்கான வரம்பற்ற இலவச அணுகலை வழங்குவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏர்டெல் தேங்க்ஸ் வாடிக்கையாளர்களுக்கான இந்த சிறப்பு சலுகை ஆனது மே 4 2020 முதல் ஜூலை 12, 2020 வரை கிடைக்கும் என்பதும், ஆனால் இதன் வழியாக ஏர்டெல் தேங்க்ஸ் வாடிக்கையாளர்கள் எந்த சந்தா கட்டணமும் செலுத்தாமல் ZEE5 பிரீமியம் உள்ளடக்கத்தின் முழு பட்டியலையும் அணுக முடியும்.

ஏர்டெல் வழங்கியுள்ள இந்த சலுகையை பெற மை ஏர்டெல் ஆப்பின் ஏர்டெல் தேங்க்ஸ் பிரிவில் இருந்து இலவச ZEE5 சந்தா சலுகையை கோர வேண்டும், இதன் வழியாக கிடைக்கும் இலவச பிரீமியம்ZEE5 உள்ளடக்கத்தை அணுக பயனர்கள் ZEE5 ஆப்பை பதிவிறக்கம் செய்ய வேண்டும் அவ்வளவு தான்.
 
Top