ஜன்னல் வழியாக எட்டி பார்த்தால்.. படுக்கையில்.. அண்ணனும் தங்கையும்.. அழுகிய நிலையில்.. ஷாக் தற்கொலை!


சென்னை: பூட்டிய வீட்டில் இருந்து குப்பென வீசியது துர்நாற்றம்.. ஜன்னலில் எட்டி பார்த்தால் பெட்ரூமில் அழுகிய நிலையில் சடலமாக விழுந்து கிடந்தனர் 2 பேர்.. அவர்கள் இருவரும் டிவி சீரியலில் நடிக்கும் அண்ணன் - தங்கை ஆவர்!
சென்னை கொடுங்கையூர் முத்தமிழ் நகர் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் இருந்து துர்நாற்றம் அடிப்பதாக அக்கம் பக்கத்தினர் கொடுங்கையூர் போலீசுக்கு தகவல் சொன்னார்கள்.

அதன்படியே போலீசாரும் விரைந்து வந்தபோது, அந்த வீடு உள்பக்கமாக பூட்டப்பட்டிருந்தது.. அதனால் ஜன்னல் வழியாக எட்டி பார்த்தால், ஒரு ஆண், ஒரு பெண் என 2 பேரும் பெட்ரூமில் உள்ள கட்டிலில் சடலமாக விழுந்து கிடந்தனர்.

துர்நாற்றம் அதனால் போலீசார் கதவை உடைத்து கொண்டு உள்ளே போனார்கள்.. கதவை திறந்ததுமே குப்பென்று நாறியது.. வீடெல்லாம் துர்நாற்றம்.. 2 பேரின் 2 சடலங்களையும் மீட்டு ஸ்டான்லி ஆஸ்பத்திரிக்கு போஸ்ட் மார்ட்டத்துக்கு அனுப்பி வைத்தனர்.

ஸ்ரீதர் அதன்பிறகு இறந்தவர்கள் யார் என்ற விசாரணையில் இறங்கினர்.. வீட்டில் சின்னத்திரை நடிகர் சங்கத்தின் ஐடி கார்டு ஒன்று இருந்தது.. அதில், ஜி. ஸ்ரீதர், மெம்பர்ஷிப் நம்பர் 1719 என்றிருந்தது. அதனால் இறந்தவர் ஸ்ரீதர்தான் என்பது உறுதியானது..

அவருடன் சேர்ந்து இறந்தது அவருடைய தங்கச்சி ஜெயகல்யாணி என்றும் தெரியவந்தது. விஷம் இதில் முதலில் ஸ்ரீதர்தான் இறந்திருக்க வேண்டும், அதற்கு பிறகுதான் அவரது தங்கை இறந்திருக்கலாம் என்கிறார்கள்.. 2 பேரும் விஷத்தை சாப்பிட்டுள்ளனர்..
2 பேரின் செல்போன்களும் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.. 2 பேருக்குமே கல்யாணம் ஆகவில்லை.. 2 பேரும் 40 வயதை கடந்தவர்கள்... அக்கம் பக்கம் வீட்டினர்களிடமும் இவர்கள் சரியாக பேசுவது கிடையாதாம்.. 2 பேருமே டிவி சீரியல்களில் நடித்து வந்துள்ளனர்.

வருமானம் லாக்டவுன் சமயத்தில் ஏராளமான டிவி நடிகர்கள் வருமானம் இல்லாமல் பாதிக்கப்பட்டுள்ளனர்.. இங்கு மட்டுமில்லை, வடமாநிலங்களிலும் இதே பிரச்சனைதான்.. நாடு முழுவதுமே டிவியில் நடிப்பதால் கிடைக்கும் சொற்ப வருமானத்தில் தான் எத்தனையோ பேர் வாழ்க்கையை ஓட்டி வருகின்றனர்..

வேலைவாய்ப்பு இல்லாதால் இவர்களில் சிலர் அடுத்தடுத்து தற்கொலைகளையும் செய்து கொள்கிறார்கள். போஸ்ட் மார்ட்டம் அதுபோல ஸ்ரீதருக்கும்கூட இப்படி வருமானமும், வறுமையும் பிரச்சனையாக இருந்திருக்குமா, அதனால்தான் தற்கொலை செய்துகொண்டாரா என தெரியவில்லை..

எதுவானாலும் போஸ்ட் மார்ட்டம் ரிப்போர்ட் வந்தால்தான் தெரியும்.. சின்னத்திரை நடிகர் சங்கம், சக நடிகர், நடிகைகளிடம் போலீசார் விசாரிக்க முடிவு செய்துள்ளனர்.. ஆனால் பூட்டிய வீட்டுக்குள், பெட்ரூமில் அண்ணனும், தங்கையும் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் சோகத்துடன் கூடிய அதிர்ச்சியையும் ஏற்படுத்தி வருகிறது.
 
Top