ஒரு ஆணைக்கு எதிரான மற்றொரு ஆணை
ஆணை பிறப்பித்து 15 மாதங்களுக்கு மேலாகிவிட்டது!
அந்த ஆணைக்கு எதிராக மற்றொரு ஆணை இப்போது பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அரசு அதிகாரியின் மீது வழக்குத்தொடர வேண்டும் என்றால், இந்திய தண்டணைச்
சட்டம் பிரிவு 197-ன் கீழ் அந்த அரசு அதிகாரியின், உயர் அதிகாரியிடம் அனுமதி பெற
வேண்டும் என்று சட்டம் சொல்கிறது. திருத்தங்கல் காவல் ஆய்வாளர் இராஜா அவர்கள்
மீது வழக்கு தொடுப்பதற்காக விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அவர்களிடம் பதிவுத்தபால்
மூலமாக கடந்த 08.05.2018 அன்று ஆதாரங்களை சமர்ப்பித்து அனுமதி கேட்டிருந்தேன்.
பதில் ஏதும் வழங்கப்படவில்லை. அதனால் குறைதீர்க்கும் நாளில் 11.06.2018 மீண்டும்
அதனை நினைவூட்டி விண்ணப்பித்திருந்தேன். அந்த விண்ணப்பமானது, அங்கிருந்த
மாவட்ட காவல்துறை அலுவலர் அவர்களிடம் அப்போதே நேரடியாக வழங்கப்பட்டது.
அதற்கும் பதில் ஏதும் வழங்கப்படவில்லை. அதனால், (1) எனது விண்ணப்பத்தின் மீது
நடவடிக்கை எடுத்து திருத்தங்கல் காவல் ஆய்வாளர் மீது வழக்குத் தொடர எப்போது
அனுமதி வழங்குவீர்கள் என்ற தகவலையும், (2) ஒரு அரசு பணியாளர்கள் மீது ஒருவர்
வழக்கு தொடர்வதற்கு முன் செய்ய வேண்டிய காரியங்கள் என்னென்ன? என்ற
தகவலையும் விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக பொது தகவல் அலுவலர்
அவர்களிடம் கடந்த 06.07.2018 அன்று தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ்
கேட்டிருந்தேன். அந்தக் கடிதமானது விருதுநகர் மாவட்ட காவல்துறை பொதுத்தகவல்
அலுவலர் அவர்களுக்கு 11.07.2018 அன்று துறை மாற்றம் செய்யப்பட்டது.

அந்த கடிதத்தை பெற்றுக் கொண்ட காவல்துறை பொது தகவல் அலுவலர் அவர்கள்,
முப்பது நாட்களுக்கு மேலாகியும் எனக்கு எந்தவிதமான பதிலையும் வழங்கவில்லை.
அதனால் 18.08.2018 அன்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களுக்கு எனது
முதல் மேல்முறையீட்டை பதிவுத்தபால் மூலமாக அனுப்பினேன். அந்த கடிதத்தை
பெற்றுக் கொண்ட மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அவர்கள் நாற்பத்து ஐந்து
நாட்களுக்கு மேலாகியும் எனக்கு எந்தவித தகவலையும் வழங்கவில்லை.அதனால்
தமிழ்நாடு தகவல் ஆணையத்திற்கு எனது இரண்டாவது மேல்முறையீட்டை கடந்த
03.10.2018 அன்று அனுப்பினேன். எனது வழக்கு தகவல் ஆணையத்தில் ஏற்றுக்
கொள்ளப்பட்டு SA7331/2018 என்று எண் வழங்கப்பட்டது. அந்த வழக்கின் மீது
21.01.2019 அன்று, கனம் தகவல் ஆணையர் திரு தட்சணாமூர்த்தி அவர்களால்,
மனுதாரருக்கு முப்பது நாட்களுக்குள் தகவல் வழங்க வேண்டும் என்று ஒரு ஆணையும்
பிறப்பிக்கப்பட்டது. அந்த ஆணையில், உத்தரவை செயல்படுத்த தவறும்பட்சத்தில்
பிரிவுகள் 20(1), 20(2) ஆகியவற்றின் கீழ் நடவடிக்கைக்கு உட்பட நேரிடும்! என்று
குறிப்பிடப்பட்டிருந்தது.

அந்த ஆணையின் நகலை இணைத்து எனக்கு தகவல்களை வழங்குமாறு மாவட்ட
காவல்துறை பொதுத்தகவல் அலுவலர் அவர்களுக்கு மீண்டும் ஒரு கடிதத்தை 01.02.2019
அன்று அனுப்பினேன். இந்த கடிதத்திற்கு பதில் அளிக்க வேண்டியது மாவட்ட ஆட்சியர்
அலுவலக பொதுத்தகவல் அலுவலர்தான்! என்று எனது வழக்கு சம்பந்தமான கடிதங்கள்
அனைத்தையும் அங்கு அனுப்பிவிட்டு அதனை மாவட்ட காவல்துறை பொதுத்தகவல்
அலுவலர் அவர்கள் 25.02.2019 (34 நாட்கள் கழித்து) எனக்கும் தெரிவித்திருந்தார்.
அந்த கோப்பை பெற்றுக் கொண்ட மாவட்ட ஆட்சியரக பொதுத்தகவல் அலுவலர்
அவர்கள் மனுதாரது 08.05.2018 & 11.06.2018 ஆகிய இரு விண்ணப்பங்களும் மாவட்ட
ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து 09.05.2018 & 30.05.2018 கடிதம் மூலமாக உரிய
நடவடிக்கைக்காக, மாவட்ட காவல்துறை அலுவலகத்திற்குத்தான் அனுப்பப்பட்டுள்ளது;
ஆகவே தாங்கள் தான் அதற்கான தகவல்களை அளிக்க வேண்டும் என்று 20.03.2019
அன்று அந்த கோப்பை மாவட்ட காவல்துறை பொதுத்தகவல் அலுவலர் அவர்களுக்கே
திருப்பி அனுப்பி வைத்துவிட்டார். நான் கோரிய தகவல்கள் எனக்கு வழங்கப்படாத
காரணத்தால், விருதுநகர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அவர்கள் மீது
நடவடிக்கை எடுக்கக்கோரி கடந்த 29.03.2019 அன்று தமிழ்நாடு தகவல் ஆணையத்திற்கு
கடிதம் அனுப்பினேன். அதன்பிறகு அந்த வழக்கின் மீது மீண்டும் ஒரு ஆணையை
18.05.2020 அன்று தகவல் ஆணையர் கனம் தட்சணாமூர்த்தி அவர்கள் பிறப்பித்துள்ளார்.

அதில் நான் கோரிய தகவல்கள் கிடைக்கப் பெறாதவை என்றும், அதனால் எனது
மனு முடிக்கப்பட்டது என்றும் குறிப்பிட்டுள்ளார். அதனை கீழே காணலாம்.
x
Next
This is the most recent post.
Previous
Older Post
 
Top