ஆதார் தனி மனிதரின் அடையாளம் எனத் தொடங்கி, பல்வேறு சர்ச்சைகளுக்கு உள்ளானது.


கடந்த செப்டம்பர் 2018-ல் உச்ச நீதிமன்றமே ஆதாரை எதற்கு எல்லாம் பயன்படுத்தலாம் என வழிகாட்டி இருக்கிறது.


அந்த உச்ச நீதிமன்றத் தீர்ப்பில், ஆதார் எண்ணை, இந்திய வருமான வரித் துறையினர் வழங்கும் பான் எண்ணுடன் இணைக்க வேண்டும் எனத் தெளிவாகச் சொல்லி இருக்கிறது.


ஆதார் கட்டாயம் 

எனவே ஆதாரை, பான் எண்ணுடன் இணைத்தே ஆக வேண்டிய கட்டாயத்தில் தள்ளப்பட்டு இருக்கிறோம். ஆதாரை பான் எண்ணுடன் இணைக்க இந்த டிசம்பர் 31, 2019 தான் கடைசி தேதி. எனவே ஆதாரை பான் உடன் இணைப்பது எப்படி மற்றும் ஆதாரை ஏற்கனவே பான் உடன் இணைத்து இருந்தால் அதை எப்படி தெரிந்து கொள்வது எனப் பார்ப்போம். முதலில், ஆதாரை பான் உடன் இணைத்து இருக்கிறோமா என சரிபார்ப்பது எப்படி எனத் தொடங்குவோம்.

ஸ்டெப் 1 Link - https://www.incometaxindiaefiling.gov.in/home முதலில் என்கிற வருமான வரித் துறையினரின் லிங்கை க்ளிக் செய்யவும். அந்த லிங்க் வழியாக, உள்ளே போனதும் மேலே படத்தில் மஞ்சள் நிறத்தில் சுட்டிக் காட்டி இருப்பது போல Link Aadhar என்கிற வார்த்தையை க்ளிக் செய்யவும். அது இன்னொரு பக்கத்துக்கு அழைத்துச் செல்லும்.  


ஸ்டெப் 1.1 நீங்கள் ஆதாரை, பான் அட்டையுடன் இணைக்கவில்லை என்றால் Link Aadhar பக்கத்தில் கேட்டு இருக்கும் பான் எண், ஆதார் எண், ஆதாரில் இருக்கும் பெயர், பிறந்த தேதி விவரங்கள் என அதில் கேட்டு இருக்கும் எல்லா விவரங்களையும் கொடுத்த பின், கீழே பச்சை நிறத்தில் Link Aadhar என்கிற சொல்லை க்ளிக் செய்யவும். அவ்வளவு தான் விவரங்கள் சரியாக இருந்தால் ஆதார் மற்றும் பான் இணைந்து விடும்.
ஸ்டெப் 2 ஒருவேளை சந்தேகம் இருந்தால்... லிங்க் ஆதார் வார்த்தையை க்ளிக் செய்த உடன், Link Aadhar பக்கத்தில், மேலே படத்தில் காட்டி இருப்பது போல, மஞ்சள் நிறத்தில் சுட்டிக் காட்டி இருக்கும் Click Here என்கிற வார்த்தையை க்ளிக் செய்யவும். க்ளிக் செய்த உடன் Link Aadhar Status என்கிற இடத்துக்குச் செல்லும்.

ஸ்டெப் 3 Link Aadhar Status பக்கத்தில், வருமான வரித் துறையினர் உங்களுக்குக் கொடுத்த பான் அட்டை எண் மற்றும் ஆதார் எண்ணைக் கேட்கும். இந்த இரண்டு விவரங்களையும் சரியாகக் கொடுத்த பின் View Link Aadhar Status என்கிற வார்த்தையைக் க்ளிக் செய்யவும்.


ஸ்டெப் 4 ஒருவேளை, நமக்கே தெரியாமல், நாம் ஆதார் மற்றும் பான் எண்களை இணைத்து இருந்தால் 'Your PAN is Linked to Aadhar Number XXXX XXXX 2019' எனக் காட்டும். அப்படிக் காட்டி விட்டால் நாம் ஆதார் எண்ணை, பான் அட்டையுடன் இணைத்து விட்டோம் என்று பொருள். 


உஷார் மக்களே ஏற்கனவே ஆதார் அட்டை, பாஸ்போர்ட் எல்லாம் கூட குடியுரிமைக்கான அனுமதி கிடையாது எனச் செய்திகள் வெளியாயின. இதற்கு மத்தியில் ஆதார் பான் அட்டையை இணைக்கவில்லை என்றால் வேறு ஏதாவது பிரச்னை வந்துவிடப் போகிறது. எனவே மக்களே முறையாக உங்கள் ஆதார் மற்றும் பான் எண்ணை இணைத்துவிடுங்கள்.
 
Top