பெற்றோரை தலைகுனிய வைக்கும் பள்ளி மாணவர்கள்! தலைநிமிர வேண்டிய வயதில் தாலிகட்டி சீரழியும் புள்ளீங்கோ..!!
நெல்லை மாவட்டம் களக்காடு அருகே பள்ளி மாணவிக்கு இளைஞர் ஒருவர் தாலிகட்டும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
அந்த வீடியோவில் சீருடையில் இருக்கும் பள்ளி மாணவிக்கு பள்ளி சீருடை அல்லாத ஒருவர் தாலிகட்டும்போது அந்த மாணவி வெட்கத்துடன் சிரித்து ஏற்றுக் கொள்வது போல உள்ளது. அருகே சில மாணவர்களும் இருப்பது வீடியோவில் பதிவாகியுள்ளது. இந்திய சட்டப்படி 18 வயது நிரம்பிய பெண்களுக்கு மட்டுமே திருமணம் செய்ய உரிமை உண்டு. பதினெட்டு வயதிற்குள் செய்தால் அது சட்டப்படி குற்றமாகும்.
நவீன காலத்தில் கல்வியில் சிறந்து விளங்கும் மாணவ, மாணவியர்களுக்கு மத்தியில் இதுபோன்று தறிகெட்டு தவறான வழியில் சென்று பெற்றோரை தலைகுனிய வைக்கும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன். குறைந்தபட்சம் வாழ்க்கை என்றால் என்னவென்றே தெரியாத இவர்களுக்கு திருமணம் ஒரு கேடா..? என்று சமூக வலைதளங்களில் கோபத்துடன் பலர் கேள்வியை முன்வைக்கின்றனர்.
மாணவர்களிடம் “கனவு காணுங்கள்” என்று சொன்ன அப்துல்கலாம் பிறந்த மண்ணில் இதுபோன்ற அவலங்கள் நடப்பது அனைவருக்கும் வருத்தத்தை உண்டாக்கியுள்ளது. சமூக வலைதளத்தை கட்டுப்பாட்டுடன் பயன்படுத்த பெற்றோர் முற்பட வேண்டும் இல்லையேல் இதுபோன்ற அதிர்ச்சியான சம்பவங்கள் அவரவர் வீட்டிலேயே அரங்கேற வாய்ப்புண்டு. டிக்டாக் போன்ற பொழுதுபோக்கு இணையத்தால் தினந்தோறும் பல்வேறு குற்றங்கள் நடந்து வருவதும் குறிப்பிடத்தக்கது.